"எமர்ஜென்சிக்கு எதிராகப் போராடுவதில்லை, ஆனால் பலன் மட்டும் மோடி பெயரில்!!" - மோடியை விளாசித்த பாஜக மூத்த தலைவர்!!
எமர்ஜென்சிக்கு எதிராகப் போராடுவதில் மோடி குரல் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பலனை மட்டும் தன் பெயரில் கைப்பற்ற முயற்சிக்கும் கெட்ட பழக்கம் மோடிக்கு உள்ளது என எம்பி சுப்பிரமணியன் சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்ச்சைக்களுக்கு பெயர் போன சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் எம்.பியாக இருந்துகொண்டே, அக்கட்சியின் நடவடிக்கைகளையும், எடுக்கும் முடிவுகளையும் விமர்சித்து வருபவர். அவரின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடியும் விதிவிலக்கல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசி கூட தெரியாது என பாஜக முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
இந்தநிலையில் 25 ஜூன் 1975 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 50 வது ஆண்டு நிறைவை குறிப்பிட்டு பிரதமர் மீது சுப்பிரமணியன் சுவாமி புதிய குற்றசாட்டை முன் வைத்துள்ளார். இதுக்குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, எமர்ஜென்சிக்கு எதிராகப் போராடுவதில் மோடி எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. அவர் குஜராத்தில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தார்.
பாபுபாய் தலைமையிலான ஜனதா மோர்ச்சாவின் குஜராத் அரசு காரணமாக அவர் எமர்ஜென்சி குறித்து வாய்திறக்கவில்லை. எந்த பிரச்சனைக்கும் மோடி குரல் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பலனை மட்டும் அவர் பெயரில் கைப்பற்ற முயற்சிக்கும் கெட்ட பழக்கம் மோடிக்கு உள்ளது என எம்பி சுப்பிரமணியன் சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Read more ; புதிய தொலைத்தொடர்பு சட்ட விதிகள் இன்று முதல் அமல்!!