For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மோடி இல்லையா?… பாஜகவில் பிரதமராக தகுதியானர்வர்கள் இவர்கள்தான்!… கருத்துக்கணிப்பு வெளியீடு!

06:20 AM Feb 10, 2024 IST | 1newsnationuser3
மோடி இல்லையா … பாஜகவில் பிரதமராக தகுதியானர்வர்கள் இவர்கள்தான் … கருத்துக்கணிப்பு வெளியீடு
Advertisement

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கூட்டணி அமைப்பது, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்த பாஜக, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் பிரதமராக மோடி தான் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது. எப்படியாவது, பாஜகவை வீழ்த்தி ஆட்சி மாற்றம் கொண்டுவரும் முனைப்பில் எதிர்கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 27 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.

Advertisement

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா டுடே செய்தி நிறுவனம் சார்பில் ‛Mood of the Nation 2024'(மக்களின் மனநிலை என்ன) என்ற பெயரில் சர்வே நடத்தி மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. நாடு முழுவதும் 2023 டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த சர்வேயில் நரேந்திர மோடிக்கு பிறகு பாஜகவில் யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தலாம்? என்ற வகையில் கேள்வி எழுப்பபட்டது. பிரதமர் மோடிக்கு தற்போது 73 வயது ஆகிறது. பாஜகவை பொறுத்தமட்டில் 75 வயதுக்கு பிறகு தலைவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரதமர் மோடிக்கு இந்த விஷயத்தில் விலக்கு அளிக்கப்படலாம். ஆனாலும் கூட அடுத்து பாஜகவில் பிரதமராக இன்னொருவரை முன்னிறுத்த வேண்டியது அவசியம் என்பதால் தான் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதில் பிரதமர் மோடிக்கு பிறகு அமித்ஷா பிரதமர் பொறுப்புக்கு பொருத்தமானவர் என அதிகமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி அமித்ஷா என்று 29 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 2வது இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவருக்கு 25 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்ரவராக்கப்பட்டார். தற்போது 2வது முறையாக உத்தர பிரதேச முதல்வராக உள்ளார். குற்றம் செய்வோரின் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ள உத்தரவிட்டது உள்ளிட்ட தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் உத்தர பிரதேச முதல்வரான பிறகு பாஜகவில் குறுகிய காலத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்துள்ளார்.

3வது இடத்தில் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான நிதின் கட்காரி உள்ளார். நிதின் கட்காரி தான் பிரதமர் பொறுப்பு ஏற்றவர் என 16 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நாக்பூர் எம்பியாக உள்ள நிதின் கட்காரி பாஜகவின் மிகவும் மூத்த தலைவர்களில் ஒருவர்.

Tags :
Advertisement