For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம் - மத்திய அரசு அறிவிப்பு..!

Modi govt decides to observe June 25 Emergency Day as 'Samvidhaan Hatya Diwas'
05:53 PM Jul 12, 2024 IST | Mari Thangam
ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்   மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

சுதந்திர இந்தியா வரலாற்றில் எமெர்ஜென்சி என்பது ஒரு கருப்பு நாள் என இன்று வரை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தினத்தை அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி இனி வரும் ஆண்டுகளில் ஜூன் மாதம் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, "1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனநிலையைக் காட்டி, நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியை 'சம்விதன் ஹத்யா திவாஸ்' என்ற தினமாக கடைபிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலியை அனுபவித்த அனைத்து மக்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாள் நமக்கு நினைவுபடுத்தும்." என கூறி உள்ளார்.

Tags :
Advertisement