Modi Cabinet 3.0: சிராக் பாஸ்வான் முதல் குமாரசாமி வரை..! பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களின் முழு விவரம்..!
Modi Cabinet 3.0: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 72 பேர் மத்திய அமைச்சர்கள் இணை அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு எந்த பொறுப்பு என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவனின் பிரமாண்டமான முன்புறத்தில் நடந்த இந்த விழாவில், பல நாட்டுத் தலைவர்கள், அரசியல் அனுபவமிக்கவர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த விழாவில், 72 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர், 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த மாறுபட்ட வரிசையில் தெலுங்கு தேசம் கட்சி (TDP), ஜனதா தளம் (United) (JD(U)), லோக் ஜனசக்தி கட்சி ((LJP), ஜனதா தளம் (Secular) (JDS), மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) போன்ற பாஜக கூட்டணியி உள்ள கட்சியின் பிரதிநிதிகள் உள்ளனர்.
பிரதமர் மோடியின் அமைச்சர்கள் குழுவில் 30 கேபினட் அமைச்சர்கள், ஐந்து சுயேச்சை அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில் யார் யாருக்கு எனினே இலக்காகி என்பது குறித்து தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி,அதன்படி கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அதே நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அது போல் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா ஆகியோருக்கு அதே பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதிஷ் குமார் அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோர்களின் கட்சிகளின் ஒருவருக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ரயில்வேத்துறையை கடந்த முறை அமைச்சராக இருந்த அஷ்விணி வைஷ்ணவ்க்கே ஒதுக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிதின் கட்கரிக்கு சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒத்துக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
S.No. | கேபினட் அமைச்சர்கள் | Party | இலாகாக்கள் |
1. | எச்டி குமாரசாமி | ஜனதா தளம் (மதச்சார்பற்ற) JDS | கனரக தொழில்துறை அமைச்சர், எஃகு அமைச்சர், |
2. | ஜிதன் ராம் மஞ்சி | இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) | குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் |
3. | லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங் | ஜனதா தளம் (ஐக்கிய) | பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் |
4. | கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு | தெலுங்கு தேசம் கட்சி (TDP) | சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் |
5 | சிராக் பாஸ்வான் | LJP (RV) | உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் |
மாநில அமைச்சர்கள் (சுயேச்சை பொறுப்பு):
S.No. | மாநில அமைச்சர்கள் (சுயேச்சை பொறுப்பு) | கட்சி | இலாகாக்கள் |
1. | பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் | சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) | ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் |
2. | ஜெயந்த் சிங் சவுத்ரி | ராஷ்ட்ரிய லோக் தளம் | திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், கல்வி அமைச்சகம் |
மாநில அமைச்சர்கள்:
S.No. | மாநில அமைச்சர்கள் | கட்சி | இலாகாக்கள் |
1. | அனுப்ரியா பட்டேல் | அப்னா தால் (சோனிலால்) | சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் |
2. | ராம்தாஸ் அத்வாலே | இந்திய குடியரசுக் கட்சி (RPI) | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் |
3. | டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் | தெலுங்கு தேசம் கட்சி (TDP) | ஊரக வளர்ச்சி அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம் |
4. | ராம் நாத் தாக்கூர் | ஜனதா தளம் (ஐக்கிய) | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் |