"திமுக பெயரை கேட்டாலே அலறும் அமித் ஷா, மோடி.."! - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் மடல்.!
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 16 17 18 தேதிகளில் நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக சார்பாக பொதுக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டங்களில் திரளாக உடன்பிறப்புகள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மடல் ஒன்றை எழுதி இருக்கிறார் மு.க ஸ்டாலின். அந்த மடலில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக கழகத் தொண்டர்கள் தயாராவது குறித்தும் பாசிச பாரதிய ஜனதா அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டியது தான் கட்டாயம் குறித்தும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர் நாளும் நமதே நாற்பதும் நமதே என்ற கோஷத்தை கடந்த வருடம் தமிழ்நாட்டில் எழுப்பினோம். இந்த கோஷம் இந்தியா முழுவதும் பரவி இன்று இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணி அமைந்திருக்கிறது . தமிழ்நாட்டில் நல்ல நிலை அக்கறை கொண்டுள்ளது போல மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா தலைமையிலான மதவாத மற்றும் சனாதனவாதிகளை ஆட்சியில் இருந்த அகற்ற நாம் கடினமாக உழைக்க வேண்டும். நம்மை மாநிலக் கட்சி எளிதாக அசைத்து விடலாம் என்று கனவு கண்டு இருந்தார்கள்.
ஆனால் இப்போது செல்லும் இடமெல்லாம் திமுக எப்படி செய்துவிட்டது திமுக அதை செய்து விட்டது என திமுக புராணம் பாடிக்கொண்டு தூக்கம் இழந்து பாஜகவினர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார். மேலும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் எந்த மாநிலங்களுக்கு சென்றாலும் திமுகவை குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளும் விடியல் அரசின் ஆட்சியும் அவர்களின் தூக்கத்தை கெடுப்பதை நம்மால் காண முடிகிறது.
திமுகவின் பெயர் தமிழகத்தை தாண்டியும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தகுந்த பயிற்சியுடன் பூத் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் களத்தில் மேடைப் பேச்சு முதல் பூத் ஏஜெண்டுகள் வரை அனைவரையும் பல்கலைக்கழகங்களில் பயின்றது போன்ற பயிற்சியுடன் களம் இறக்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகம் தான் என பெருமையுடன் தெரிவித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் திமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக தங்கள் கைவசம் இருக்கும் ஏவல் துறைகளான அமலாக்கத்துறை வருமான வரித்துறை புலனாய்வுத் துறை போன்றவற்றை தங்களுக்கு பிடிக்காத இயக்கத்தினர் மீது ஏவி பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் .