மோடி 3.0!. ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை!. ஹர்தீப் சிங் பூரி அதிரடி!
Petrol-Diesel: பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தநிலையில், பெட்ரோலியத் துறையில் நடந்து வரும் சீர்திருத்தங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் எரிபொருட்களைம் சேர்ப்பது என முக்கிய விஷயங்களை குறித்து பேசிய ஹர்தீப்சிங் பூரி, எரிசக்தி துறையில் விலையை சீராக வைக்கவும், வரிவிதிப்புகளை சீரமைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும் தெளிவுப்படுத்தினார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என விளக்கமளித்த அவர், பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். பசுமை ஹைட்ரஜன் தொடர்பாக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் தொடர்பாக மத்திய அரசு கவனம் செலுத்துவதாக டிசம்பர் 2022-அக்டோபர் 2023 ஆண்டில் எத்தனால் கலந்த பெட்ரோல் என்ற திட்டத்தில் 12 சதவீதமும், அடுத்த ஆண்டுகளில் 15 சதவீதமும் அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றால், மாநிலங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், எரிபொருளும் மதுவும் முக்கிய வருவாய் ஈட்டக்கூடியவை என்று கூறியிருந்தார். "மாநிலங்கள் நடவடிக்கை எடுத்தால், நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது மற்றொரு பிரச்சினை" என்று கடந்த 2022ம் ஆண்டு மத்திய அமைச்சர் பூரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட 2023 நவம்பரில் இதை செயல்படுத்துவது மக்களுக்கு நன்மை பயக்கும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தற்போது ஜிஎஸ்டியின் கீழ் வராத பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான விசையாழி எரிபொருள் போன்ற எரிபொருள்கள் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்), மத்திய கலால் வரி மற்றும் மத்திய விற்பனை வரிக்கு உட்பட்டவை ஆகும். இருப்பினும், ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.
ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவந்தால் தாக்கம் எப்படி இருக்கும்? பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது அவற்றின் விலையை எவ்வாறு பாதிக்கும்? கடந்த ஆண்டு, பட்ஜெட்டுக்கு பிந்தைய விவாதத்தில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மா சீதாராமன் கூறியிருந்தார். அதாவது "நாங்கள் (மத்திய அரசு) அதை விரும்பவில்லை, ஒட்டுமொத்த ஜிஎஸ்டி கவுன்சிலும் ஆம் என்று கூறுகிறது. அவர்கள் ஒரு விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், பின்னர் நாங்கள் அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருகிறோம்," என்று நிதியமைச்சர் கூறினார்.
பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, ஏடிஎஃப் ஆகியவை ஜிஎஸ்டியின் கீழ் வரும் என்று முடிவு செய்யப்பட்டால், அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் அடிப்படை விலையில் அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்படும். எரிபொருள் விலையில் மத்தியமும் மாநிலங்களும் விதிக்கும் கலால் மற்றும் வாட் வரியின் வெவ்வேறு விகிதங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விகிதத்துடன் மாற்றப்படும்.
மத்திய, மாநில அரசின் கலால் வரி நீக்கப்படுவதால், எரிபொருள் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் கிட்டத்தட்ட பாதியை மத்திய கலால் மற்றும் மாநில வாட் வரியாக இருப்பதால், அரசாங்க வருவாயை எதிர்மறையாக பாதிக்கும். அவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது மாநிலங்களுக்கு வருவாய் ஈட்டுவதை பாதிக்கும் என்று தனியார் செய்தி தொலைக்காட்சி அறிக்கை கூறுகிறது. மேலும், 28 சதவீத ஜிஎஸ்டி மத்திய மற்றும் மாநிலங்களுக்கு சம விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.
PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி (PHDCCI) செப்டம்பர் 2021 இல், GSTயின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் விலைகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் நேரடிப் பலனைத் தராது என்று கூறியது. PHDCCI தலைவர் சஞ்சய் அகர்வால், நுகர்வோரைப் பொறுத்த வரையில், நேரடியான பலன் எதுவும் இருக்காது" என்று கூறினார்.
Readmore: இந்தியர்கள் இருவர் பலி எதிரொலி!. ராணுவ ஆட்சேர்ப்பை நிறுத்துங்கள்!… ரஷ்யாவிற்கு இந்தியா கோரிக்கை!