ராணுவ ஹெலிகாப்டரில் பெண்ணின் முனகல் சத்தம்..!! முழு நிர்வாணத்துடன் உடலுறவு..!! போதையில் சிக்கிய அதிகாரிகள்..!!
ராணுவ ஹெலிகாப்டரில் 2 அதிகாரிகள் பாலியல் உறவில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் சம்பவத்தன்று வழக்கத்துக்கு மாறாக ராணுவ ஹெலிகாப்டர் காணப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டரில் இருந்து முனகல் சத்தமும் கேட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த சக அதிகாரி ஒருவர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு பின்னால் சில பாதுகாப்பு குறைபாடு அச்சுறுத்தல்களும் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனெனில், இருவரும் ஹெலிகாப்டரின் ரகசிய பகுதியில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இரு அதிகாரிகளும் ஆடைகள் இன்றி நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், ராணுவ உயரதிகாரிக்கு புகாரளித்தார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண் ராணுவ வீரருடன், ஹெலிகாப்டரில் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்ணும் ராணுவ வீரர் ஆவார். இவரும் இங்கிலாந்து ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் முழுமையாக நிர்வாணமாக இருந்துள்ளனர். அதிலும், ஹெலிகாப்டருக்குள் ராணுவ அதிகாரியின் ராணுவ உடையும், பெண் அதிகாரியின் உடையும் இருந்துள்ளது. ராணுவ அறிக்கையில், பெண் அதிகாரி சாதாரண உடையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரு ராணுவ அதிகாரிகள் பாலியல் உறவு வைத்துக் கொண்டு சிக்குவது இங்கிலாந்தைப் பொறுத்தவரை இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதே போன்று சம்பவங்கள் நடந்துள்ளன.
எனினும், இம்முறை ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பாலியல் உறவின்போது இருவருமே அதீத மது போதையில் இருந்துள்ளனர். அதிகாரிகள் எச்சரித்த பின்னர், உடையை அணிந்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர். இதனால், இச்சம்பவத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரிப்பார்கள் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்ககைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பயிற்சி மற்றும் பயன்பாடு முடிந்தவுடன் ஹெலிகாப்டரை யாரும் பயன்படுத்த முடியாத வகையில், பூட்டி வைக்க வேண்டும் என்று உயரதிகாரிகள் ராணுவ வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏனென்றால், அவர்கள் பிடிபட்ட ஹெலிகாப்டர் இராணுவ விமானப்படையின் 653 படைப்பிரிவுக்கு சொந்தமானது. ஆனால், பாலியல் உறவில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் வேறு பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
Read More : 334 காலிப்பணியிடங்கள்..!! மாதம் ரூ.2,80,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!