Rajya Sabha | "சவாலான காலங்களிலும் வியக்க வைத்த தலைமை பண்பு"… மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்.!!
Rajya Sabha: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபை உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் ஓய்வு பெற இருக்கிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 1991 முதல் 96 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி அமைச்சர் ஆக பொறுப்பு வகித்தவர் மன்மோகன் சிங்.
மாநிலங்களவை உறுப்பினரான இவர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். தாராளமயமாக்கல் கொள்கையும் பன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து 2004 ஆம் வருடம் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது மன்மோகன் சிங் பிரதமர் ஆனார் . இந்த காலகட்டத்தில் பொருளாதார துறையில் மன்மோகன் சிங் பல மாற்றங்களையும் புரட்சிகளையும் ஏற்படுத்தினார். 2007/2008 உலக பொருளாதார மந்தத்தில் இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க இவரது கொள்கைகள் பெரிதும் உதவியது.
2019 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மன்மோகன் சிங். இந்நிலையில் அவரது பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கிற்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களை X சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் " 33 வருடங்களாக பாராளுமன்றத்தின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றியதற்கு திமுக சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 33 ஆண்டுகளிலும் தங்களது அர்ப்பணிப்பு அரசியல் அறிவு புத்திக்கூர்மை பணிவு ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களது அபாரமான தலைமை பண்பைக் கண்டு வியந்து இருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் தங்கள் ஓய்விற்கும் பிறகு அமை மகிழ்ச்சி சந்தோஷம் நிலவ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.