முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடங்கியது வாக்குப்பதிவு….! நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்., பலத்த பாதுகாப்பு! 3 மணிக்கே வாக்குபதிவு நிறைவு..!

07:32 AM Nov 07, 2023 IST | 1newsnationuser3
Advertisement

மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisement

இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. இன்று 20 இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 இடங்களுக்கு வரும் 17-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. தற்போது வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு சிக்கல் நிறைந்த தொகுதிகளில் மாலை 3 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அங்கு அமலில் உள்ளது.

இதேபோல், மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் களை கட்டியிருந்தது. நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆனாலும் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களும் அரசை தக்க வைக்க மாநிலத்தில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர். இப்படி 20 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் கடந்த 3 நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. மிசோரம் மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 8.35 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் இன்று மற்றும் வரும் 17 ம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சுமார் 6,000 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் சுவாமி ஆத்மானந்தா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படும், சக்ஷம் யோஜனா(Saksham Yojna) திட்டத்தின் கீழ் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ரூ. 500 மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மிசோரமில் மொத்தமுள்ள 40 இடங்களில் ஆளும் எம்.என்.எப். 17 முதல் 21 இடங்களிலும், காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களிலும், இசட்.பி.எம். 10 முதல் 14 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெல்லும் என்றும், அதன்படி அங்கு ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Chhattisgarh assembly pollingMizoramசத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவுபலத்த பாதுகாப்புமிசோரம்
Advertisement
Next Article