சூடான டீயில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடியுங்கள்!… நோய்கள் அண்டாது!… ஷேவிங் க்ரீமாகவும் பயன்படுத்தலாம்!
பல வகையான உணவு பொருட்களில் இருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகின்றன. இந்த எண்ணெய் வகைகளில் ஒன்றான “தேங்காய் எண்ணெய்” மிக நெடுங்காலமாகவே நமது சமையல் மற்றும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேங்காய் எண்ணெய் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.
சருமத்தின் நலனை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய் முன்னனி வகிக்கிறது. தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணையை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம். காயம் ஏற்பட்டு ஆறிக்கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு. அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய் ஒரு ‘மாய்ஸரஸர்’ ஆக செயல்படுவதால், சருமம் காய்ந்து போகாமல் இருக்கவும், வெடிப்புகளிலிருந்து தடுக்கவும், தேங்காய் எண்ணெய்யைத் தடவி பயனடையலாம். தேங்காய் எண்ணெய் ஷேவிங் க்ரீமாகவும் பயன்படும். முகத்தில் தடவி, லேசாக மசாஜ் செய்தபின் உங்கள் ரேஸரை உபயோகிக்கலாம். முகத்தில் காயம் ஏற்படாமல் தடுக்கமுடியும். தேங்காய் எண்ணெய், சளிக்கும் மூக்கடைப்புக்கும் சிறந்த நிவாரணி. சிலருக்கு சளி தொல்லையிருக்கும் .ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சூடான டீயில் கலந்து ஒரே மடங்காகக் குடித்துவிட்டால், சளித்தொல்லை நீங்கும்.
மேலும் மூக்கின் மீதும், மூக்கின் உள்ளேயும் தேங்காய் எண்ணெய் தடவினால், மூக்கடைப்பு நீங்கும். பற்கள் பளிச்சிட டூத் பேஸ்ட்டுகளோ பற்பசைகளோ தேவையில்லை. தேங்காய் எண்ணெய்யை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின்மீது தடவினால், சிறிது நாட்களிலேயே பற்கள் மின்னுவதை பார்க்கலாம். விரைவான பலனுக்கு கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் கலந்துகொள்ளலாம். தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்.