மெக்காவில் காணாமல்போகும் பெண்கள்!. எப்படி கவனிக்கப்படாமல் இருக்கிறது?. அதிர்ச்சி பதிவு!.
Mecca: ஹஜ்ஜின் போது பெண் ஒருவர், வண்டி ஓட்டுனரால் கடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 21ம் தேதி Shadab (ImShadab_) என்ற எக்ஸ் தளத்தில், ஹஜ்ஜின் போது தெரிந்த நபரின் மனைவி ஒரு வண்டி ஓட்டுனரால் கடத்தப்பட்டதாகவும், போலீசார் எவ்வளவோ முயற்சி செய்தும் மனைவியை கண்டுபிடிக்க முடியாமல் போனதால் கணவன் மட்டும் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்று பதிவிட்டிருந்தார். பின்னர் இந்த பதிவு வைரலானதையடுத்து, சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட பதிவுகளின் ஸ்கிரீன்ஷாட்கள் HPhobiaWatch என்ற எக்ஸ் தளம் மூலம் பகிரப்பட்டது.
ஷதாப்பிற்கு பதிலளித்த X பயனர் சாதிக், இதேபோன்ற ஒருசம்பவத்தில் வண்டி ஓட்டுநரால் கடத்தப்பட்ட ஒரு சிறுமி பல நாட்களாக ஹோட்டலில் வைத்திருந்து, பின்னர் அந்த சிறுமி தங்கியிருந்த அதே ஹோட்டலிலே ஓட்டுநர் விட்டுச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
மற்றொரு X பயனர் Bajify கடந்த ஆண்டு தனது அண்டை வீட்டாருக்கு இதே போன்ற சம்பவம் நடந்ததாக கூறினார். புதுமணத் தம்பதிகள் புனித யாத்திரைக்காக மதீனா சென்றனர். கணவன் வண்டியில் இருந்து இறங்கியதும் டிரைவர் மணப்பெண்ணுடன் ஓடிவிட்டார். மற்றொரு பயனர் முகமது ஜுனைத் கான் எழுதினார், “எங்களை மக்காவிலிருந்து மதீனாவுக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுநர் எல்லாப் பெண்களின் மீதும் தொலைபேசி எண்களை வீசியது எனக்கு நினைவிருக்கிறது. கணவர் தண்ணீர் வாங்க இறங்கியதும், டிரைவர் மனைவியை அழைத்துக்கொண்டு தப்பியோடினார். இதுவரை அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஹஜ்ஜின் போது பெண்கள் காணாமல் போவது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. பெண்கள் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக பல்வேறு செய்திகளை OpIndia அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, 2023, அக்டோபர் 30ல் தெற்கு சுலைமானியா கவர்னரேட்டில் உள்ள கலாரைச் சேர்ந்த ஒரு பெண் சவுதி அரேபியாவில் உம்ரா செய்து கொண்டிருந்தபோது காணாமல் போனதாக 964 மீடியாவின் அறிக்கை கூறுகிறது. 59 வயதான பெண்ணின் குடும்பத்தினர் அவர் தனது சகோதரர் மற்றும் பல உறவினர்களுடன் பயணம் செய்ததாக தெரிவித்தனர்.
சிஎன்என் செய்தியின்படி, 2018 ஆம் ஆண்டில், ஹஜ்ஜில் பாலியல் கொடுமைகளை எதிர்கொண்ட ஐந்து பெண்களின் கதைகள் பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டது. பெரும்பாலான பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் தவாஃப் சடங்கின் போது நடந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில், மெக்காவில் 5 வயது பர்மிய தேசிய சிறுமியை கடத்தியதற்காக ஒரு பாகிஸ்தானிய பெண் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 29ஆம் தேதி கடத்தப்பட்ட அவர், நவம்பர் 1ஆம் தேதி மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: பகீர்!. “நடிகைகளுடன் உறவுகள் தேவை”!. ருதுராஜுக்காக கொந்தளித்த பத்ரிநாத்!. பிசிசிஐ மீது காட்டம்!