22 பேருடன் காணாமல் போன ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து…! 17 பேரின் உடல்கள் மீட்ப்பு..!
ரஷ்யாவின் எம்ஐ-8 ஹெலிகாப்டர் கடந்த சனிக்கிழமையன்று, 19 பயணிகள், மூன்று பணியாளர்கள் உட்பட 22 பேருடன் கம்சட்கா பகுதியில் உள்ள வச்கஜெட்ஸ் எரிமலைக்கு அருகில் புறப்பட்டது, ஆனால் திட்டமிட்டபடி அதன் இலக்கை அடையாமல் ரஷ்யாவின் தொலைதூர கிழக்கில் காணாமல் போன ஹெலிகாப்டர் கடைசியாக தொடர்பு கொண்ட இடத்திற்கு அருகில் 900 மீட்டர் உயரத்தில் விபத்துக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அதில் இருந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. அவசரகால அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் RIA நோவோஸ்டி விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்று கூறினார்.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் அவசரகால அமைச்சகத்தின் பதிவில், "முன்பு காணாமல் போன ஹெலிகாப்டரின் சிதைவுகள் வானிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது கடைசியாக தொடர்பு கொண்ட இடத்திற்கு அருகில் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று கம்சட்கா பகுதியில் உள்ள வச்கஜெட்ஸ் எரிமலைக்கு அருகில் புறப்பட்ட எம்ஐ-8 ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி அதன் இலக்கை அடையவில்லை என்று ரஷ்யாவின் பெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. Mi-8 என்பது 1960 களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டர் ஆகும். இந்தஇரண்டு எஞ்சின் ஹெலிகாப்டர் ரஷ்யாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
Read More: தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள்.. கூகுளுடன் கைகோர்த்த தமிழக அரசு..!! நெக்ஸ்ட் என்ன?