முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கட்சிப் பணிகளில் காணவில்லை..!! சினேகன் மீது எழுந்த புகார்..!! அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்..!! மநீம அதிரடி

08:23 AM Nov 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொடந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இதனால் இந்த கட்சியின் வருங்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் நீதி மய்யம் 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் விளைவாக 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 3.7 விழுக்காடு வாக்குகள் பெற்று நாங்களும் அரசியல் களத்தில் இருக்கிறோம் என்று அழுத்தமாக தெரிவித்தது.

Advertisement

அடுத்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்து கட்சியுடன் கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் களம் கண்டது. ஆனால், அதிலும் தோல்வியே மிஞ்சியது. நாடாளுமன்ற தேர்தலில் 3.7 விழுக்காடு பெற்ற கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் 2.5 விழுக்காடு மட்டுமே வாக்குப் பெற்றது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொடந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி மாநில செயலாளர் சினேகன் கட்சிப் பணிகளில் காணவில்லை என்றும் மநீம இளைஞர் அணி இருக்கா..? இல்லையா..? என கடுமையாக விமர்சித்து சினேகன் புகைப்படத்துடன் மிஸ்ஸிங் என அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர் மௌலி ஜெயராமன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக மௌலி ஜெயராமன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

Tags :
கமல்ஹாசன்சினேகன்மக்கள் நீதி மய்யம்
Advertisement
Next Article