For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

34 இடங்களில் காயம்!! ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை!! பிரேதப் பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்!!

Missing Ear & Ruptured Testicles: Autopsy Of Karnataka 'Fan Murder' Victim Reveals Gruesome Details
03:18 PM Jun 20, 2024 IST | Mari Thangam
34 இடங்களில் காயம்   ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை   பிரேதப் பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்
Advertisement

கர்நாடகாவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்து கிடந்த ரேணுகாசாமி எந்தளவுக்கு டார்ச்சர் செய்யப்பட்டார். அவரது உடல் எந்தளவுக்கு கொடூரமான நிலையில் இருந்தது என்பது குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

உயிரிழந்த ரேணுகா சாமியின் உடற்கூறாய்வு முடிவுகளின் படி, 34 இடங்களில் காயம் செய்யப்பட்டிருக்கிறார் ரேணுகா சாமி. மேலும் அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவருடைய மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு தொந்தரவு செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரம் மேலும் அதிர்வலைகளை கிளப்பி விட்டிருக்கிறது.

பின்னணி :

பெங்களூரு காமாட்சிபாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுமன்னாஹள்ளி குடியிருப்பு பகுதியில் உள்ள ராஜா கால்வாய் அருகே ஆண் சடலத்தை நாய்கள் இழுத்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்ற குடியிருப்பு காவலாளி அதைப் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, உயிரிழந்தவர் சித்ர துர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி. அவர் அங்குள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட திரைப்பட நடிகை பவித்ரா கௌடாவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவு செய்துள்ளார். பவித்ரா கவுடாவுக்கு தவறான செய்திகளை அனுப்புவதற்காக ரேணுகாசாமி போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார். தர்ஷனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நடிகை, சிலர் மூலம் ரேணுகாசாமியை சிக்ரதுர்காவில் இருந்து பெங்களூரு அழைத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த கன்னட நடிகர் தர்ஷன், தானும் சேர்ந்து ரேணுகாசாமியை அடித்துள்ளார் (தர்ஷனும் பவித்ராவும் கணவன் மனைவி). இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக்கண்ட அவர்கள் சடலத்தை ராஜா கால்வாய் அருகில் வீசிச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தர்ஷனை மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல திரைப்பட நடிகை பவித்ரா கௌடாவை ஆர்ஆர்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை பவித்ரா க, தர்ஷன் தூகுதீபா, பவன், ராகவேந்திரா, நந்தீஷ், வினய், நாகராஜு, லட்சுமண், தீபக், பிரதோஷ், கார்த்திக், கேசவமூர்த்தி, நிகில் நாயக், ஜெகதீஷ், அனு, ரவி, மற்றும் ராஜு ஆகிய 11 கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more ; ஹஜ் பயணத்தில் பலியான 4 தமிழர்களின் உடல் சவூதியில் அடக்கம்!! ; குடும்பத்தினர் ஒப்புதல்!!

Tags :
Advertisement