மிஸ் யுனிவர்ஸ் 2024!. இந்தியாவின் ரியா சிங்கா வெளியேற்றம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!
Miss Universe 2024: ரியா சிங்கா முதல் 12 இடங்களுக்குள் வரத் தவறியதால், மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை பொய்த்துப் போனது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செப்.22 மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இந்த போட்டியில், 51 பேர் கலந்துகொண்டனர். இந்த இறுதி போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா (19), 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்.
முதல் ரன்னர் அப் இடத்தை பிரஞ்சல் பிரியா, 2வது ரன்னர் அப் இடத்தை சாவி வெர்ஜ், 3வது ரன்னர் அப் இடத்தை சுஷ்மிதா ராய், 4வது இடத்தை ரூஃபுஸானோ விஸோ ஆகியோர் பிடித்தனர். இதையடுத்து, மெக்சிகோவில் 73வது பிரபஞ்ச அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில், மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியா சார்பில் ரியா சிங்கா கலந்துகொண்டார்,
முதல் 30 இடங்களுக்குள் நுழைந்து, ஆரம்பச் சுற்றுகளில் அசத்திய ரியா சிங்கா, இறுதிச் சுற்றில் இடம் பெற முடியவில்லை. அதன்படி, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து, வெனிசுலா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த 12 இறுதிப் போட்டியாளர்கள் தங்களின் பிரமிக்க வைக்கும் மாலை கவுன்களை அறிமுகம் செய்த பின்னர் இறுதிப் போட்டியில் தங்கள் இடத்தை தக்கவைத்து கொண்டனர்.
நீச்சலுடைப் பிரிவுடன் முடிவடைந்த அரையிறுதியைத் தொடர்ந்து, மிஸ் யுனிவர்ஸ் 2024க்கான 12 இறுதிப் போட்டியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. பொலிவியா, மெக்சிகோ, வெனிசுலா, அர்ஜென்டினா, புவேர்ட்டோ ரிக்கோ, நைஜீரியா, ரஷ்யா, சிலி, தாய்லாந்து, டென்மார்க், கனடா மற்றும் பெரு ஆகிய நாடுகளின் அழகிகள் இடம்பெற்றுள்ளனர்.