2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா!. அமெரிக்காவைச் சேர்ந்த துருவி படேல் முடிசூடினார்!
Dhruvi Patel: அமெரிக்காவைச் சேர்ந்த துருவி படேல், 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். பாலிவுட் நடிகையாகவும், யுனிசெஃப் தூதராகவும் இருக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு வெளியே நடத்தப்பட்ட மிஸ் இந்தியா வேர்ல்ட் வைடு 2024ம் ஆண்டுக்கான போட்டி நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்திய விழா குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. 31வது ஆண்டுகளாக நடத்தப்பட்டும் இந்த போட்டியில் இந்தியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். போட்டியின் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த Computer Information System பிரிவை சேர்ந்த மாணவி துருவி படேல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.
சுரினாமைச் சேர்ந்த லிசா அப்டோல்ஹாக் முதல் ரன்னர்-அப் ஆகவும், நெதர்லாந்தைச் சேர்ந்த மாளவிகா ஷர்மா இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும் வெற்றிபெற்றனர். திருமதி பிரிவில், டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த SuAnn Mouttet பட்டத்தை வென்றார், மேலும் Guadeloupe ஐச் சேர்ந்த Sierra Suret மிஸ் டீன் இந்தியா உலகளவில் முடிசூட்டப்பட்டார். நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்ரேயா சிங் மற்றும் சுரினாமைச் சேர்ந்த ஷ்ரதா டெட்ஜோ ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் ரன்னர் அப்களாக அறிவிக்கப்பட்டனர்.
பட்டத்தை வென்ற பின் பேசிய துருவி படேல், பாலிவுட் நடிகையாகவும், யுனிசெஃப் தூதராகவும் இருக்க தான் ஆசைப்படுவதாக தெரிவித்தார். "உலகளவில் மிஸ் இந்தியாவை வெல்வது ஒரு நம்பமுடியாத கவுரவம். இது ஒரு கிரீடத்தை விட மேலானது - இது எனது பாரம்பரியம், எனது மதிப்புகள் மற்றும் உலக அளவில் மற்றவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பைப் பிரதிபலிக்கிறது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.