முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆய்வில் அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் விற்கப்படும் 70 சதவீத புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் தவறாக பெயரிடப்பட்டுள்ளன..!

03:17 PM Apr 12, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியாவில் விற்கப்படும் புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் பெரும்பாலானவை தவறான தகவல்களை தறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Advertisement

protien powder: சுறுசுறுப்பாக இருக்கவும், தசை வெகுஜனத்தை அதிகரிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்று புரத பொடிகள். இதனை பெரியவர்கள், சிறியவர்கள் விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் எடுத்துக்கொள்கின்றனர்.

இந்தியாவில் விற்கப்படும் மற்றும் உட்கொள்ளப்படும் புரதப் பொடிகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற இயற்கைப் பொருட்களுடன் கூடிய புரத பொடிகளின் 36 வகை பிராண்டுகள் ஆய்வு செய்யப்பட்டது. 36 பிராண்டுகளிலும் 70 சதவீதத்திற்கும் அதிகமான தவறான தகவல்களை மக்களிடம் விளம்பரம் செய்கின்றனர். மேலும் 14 சதவீத மாதிரிகள் தீங்கு விளைவிக்கும் பூஞ்சை அஃப்லாடாக்சின்களால் தயார் செய்யப்பட்டவை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் வல்லுநர்கள் இதுகுறித்து கூறியதாவது, “புரோட்டீன் பொடிகள் பல ஆரோக்கிய நலன்களை பெற்றிருந்தாலும், அதிக அளவு புரதத்தை உட்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கலப்படம் செய்யப்பட்ட புரோட்டின் பொடிகளால் ஒவ்வாமை, மலச்சிக்கல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். மேலும், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை இது சேதபடுத்தும்” எனத் தெரிவித்தனர்.

Tags :
indiaprotine supplement
Advertisement
Next Article