For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் துயரம்!. 700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை!. மீட்புப் பணிகள் தீவிரம்!.

07:45 AM Dec 24, 2024 IST | Kokila
மீண்டும் துயரம்   700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை   மீட்புப் பணிகள் தீவிரம்
Advertisement

bore well: ராஜஸ்தானில் 700 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அந்தவகையில் கோட்புட்லி - பெஹ்ரோர் மாவட்டத்தில் சரூந்த் கிராமம் உள்ளது. அங்கு விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று அங்கு விளையாடி கொண்டிருந்த சென்ட்டா என்ற 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Readmore: கோர தாண்டவமாடிய சிடோ சூறாவளி!. பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!. 800க்கும் மேற்பட்டோர் காயம்!. மொசாம்பிக்கில் பயங்கரம்!

Tags :
Advertisement