முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராமன் சீதையை தேடிய மலை.. இராமாயண கதையை கண்முன் காட்டும் சிற்பங்கள்.. தென்காசி மாவட்டத்தில் இப்படி ஒரு கோவிலா?

Miracles of Alankulam Ramar Temple: Miraculous Hill where Rama stood on one leg and searched for Sita!
06:52 AM Oct 16, 2024 IST | Mari Thangam
Advertisement

ராமாயணத்தில் அனுமன் சிரஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் போது விழுந்த ஒரு பகுதிதான் இந்த `ஒக்க நின்றான் மலை' என்பர்.  சீதையைத் தேடுவதற்காக ராமர் இந்த மலையின் மீது ஏறி ஒற்றைக் காலில் ஒக்கி நின்று பார்த்ததால் இந்த மலைக்கு, 'ஒக்க நின்றான் மலை' எனப் பெயர் வந்தது என்பர். இந்த மலை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ளது. ராமர் சீதையின் வரலாற்றை பறைசாற்றும் ஆலங்குளம் ராமர் கோவிலின் சிறப்புக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திச் சென்ற பிறகு ராமர், லட்சுமணன், அனுமன் மற்றும் வானரப் படைகளோடு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தங்கி சீதையைத் தேடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதற்குச் சான்றாக இந்த ஒக்க நின்றான் மலையும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் விளங்குகின்றன. சீதையைத் தேடுவதற்காக ராமர் இந்த மலையின் மீது ஏறி ஒற்றைக் காலில் ஒக்கி நின்று பார்த்ததால் இந்த மலைக்கு, 'ஒக்க நின்றான் மலை' எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

கோவில் சிற்பங்களில் இராமாயண கதை : இந்த கோவிலில் நுழைவு வாயிலின் இரு புறத்திலும் இரண்டு பெரும் யானைகள் வரவேற்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பாற்கடலில் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் சூரியநாராயணர், 16 அடி உயர விஸ்வ பிரம்மா சிலை, குரு வசிஷ்டர், அகத்திய முனிகள், கருடர், ஸ்ரீ கௌதமர், ஸ்ரீ பரத்வாஜர், ஹயக்ரீவர், வேதநாராயணர், விநாயகர், சரஸ்வதி, சப்தரிஷி சிலை மற்றும் பசு சிலைகளும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் திருப்பாற்கடலைச் சுற்றி வரும்போது சில்லறைகளைத் திருப்பாற்கடலில் போட்டு வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபட்டால் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும் என்று நம்ப படுகிறது. இலங்கையில் போர் முடிந்து சீதா தேவியோடு ராமர் அயோத்தி செல்லும்போது சீதாதேவி அருந்த நீர் வேண்டும் எனக் கேட்க, ராமபிரான் நீர் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயர் சிலைகளும், விலங்குகள் மற்றும் பறவைகள் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ராமர் சந்நிதிக்கு எதிர்புறமாக புதிதாக ராமரை வணங்குவது போல் ஓர் ஆஞ்சநேயர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இங்கு வந்து வணங்கிவிட்டு தியானம் செய்கிறார்கள். இயற்கையான காற்றும் மூலிகை வாசமும் நிறைந்துள்ளதால் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக ஒக்க நின்றான் மலை ராமர் கோயில் உள்ளது.

Read more ; சொத்து தகறாறு.. 12 ஆம் வகுப்பு மாணவி உட்பட 2 பேரை கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா..!!

Tags :
Alankulam Ramar Templeஒக்க நின்றான் மலைசீதைராமர்
Advertisement
Next Article