முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விமர்சிப்பவர்களுக்கு நன்றி.. எனது பணியின் மூலம் உங்களுக்கு பதிலளிப்பேன்..!! - உதயநிதி அதிரடி பேச்சு

Minister Udayanidhi said that he will answer those who criticize me through his work.
12:30 PM Sep 29, 2024 IST | Mari Thangam
Advertisement

திமுகவில் பல மாதங்களாக பேசப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போவதற்கு முக்கியமான காரணமாக செந்தில் பாலாஜியின் ஜாமீனும் சொல்லப்பட்டது. தற்போது ஜாமீனில் வெளியாகியிருக்கும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தடையில்லை. ஆகவே, அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதன்படி, விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதய நிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதிவி வழங்கப்பட உள்ளது. திமுகவில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

Advertisement

தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். அதோடு, பொன்முடி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மதிவேந்தன் ஆகிய 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை அமைச்சரவை மாற்றம் நிகழ உள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல. பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன்.

எனக்கு வாழ்த்துக் கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி. என் மீதான விமர்சனங்களுக்கு நான் எனது பணியின் மூலம் பதிலளிப்பேன். அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அதன்படி எனது பணிகளை அமைத்துக் கொள்கிறேன். திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சனங்கள் வந்தது. என்னுடைய பணிகள் மூலமாக மட்டும் தான் அதனை நியாயப்படுத்த முடியும். அமைச்சர் பொறுப்பு கொடுத்த போதும் விமர்சனங்கள் வந்தது” எனத் தெரிவித்தார். தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று(செப். 29) பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு எந்த தகுதியும் இல்லை…! ராமதாஸ் கடும் விமர்சனம்…!

Tags :
criticizeUdayanidhiதுணை முதல்வர் பதவிமுதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Next Article