அடி தூள்..!! தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம்..!! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும்பட்சத்தில் அதனை பின்பற்றி புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று குழு அமைத்து இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Read More : திடீரென சட்டப்பேரவையில் கண்ணீர் விட்ட CM ஸ்டாலின்..!! என்னை அப்படி அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி..!!