முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பில் திமுக...! அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு...! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை...!

06:52 AM Nov 20, 2023 IST | 1newsnationuser2
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் கீழ் அமைச்சர் செந்தில்  பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement

அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை முதன்மை அமர்வு நீதிபதியிடம் தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 10 முறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது ‌என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
EDEnforcement directorateSenthil Balajisupreme court
Advertisement
Next Article