அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீண்டும் நியமனம்..!! திமுக தலைமைக் கழகம் அதிரடி அறிவிப்பு..!!
அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்த நாசர் ஏற்கனவே நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பால் சிறுபான்மையினர் திமுகவில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட திமுக சார்பாக ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கவில்லையென்றும், கட்சியிலும் தலைமை பொறுப்பில் இஸ்லாமியர்கள் வாய்ப்பு மறுக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்து வந்தது. இந்நிலையில், திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திமுகவின் 15-வது பொதுத்தேர்தலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ப.சேகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இப்பொறுப்புக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து 2024, ஜூன் 17 (திங்கட்கிழமை) அன்று ரூ.25,000 வீதம் தலைமைக் கழகத்தில் அளித்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். "என தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதில், விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கு செஞ்சி மஸ்தான் அவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனு ஏற்கப்பட்டு, விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவராக, திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது” என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Read More : இன்ஸ்டாவில் பழக்கமான இளம்பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்து கூட்டு பலாத்காரம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!