முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமைச்சர் செஞ்சி மஸ்தான் முக்கிய பொறுப்பில் இருந்து விடுவிடுப்பு..!! திமுக தலைமை அறிவிப்பு..!!

DMK's Villupuram North District Secretary, Minister Senji Masthan, has been relieved of his duties by the party leadership.
01:27 PM Jun 11, 2024 IST | Chella
Advertisement

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் நியமிக்கப்படுகிறார்.

இதேபோல், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த நா.புகழேந்தி உயிரிழந்த நிலையில், கட்சிப் பணிகள் நடந்திட கெளதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பிரபல ஹோட்டலில் போதை விருந்து..!! கைதான நடிகை ஹேமா..!! நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடி நீக்கம்..!!

Tags :
Dmk
Advertisement
Next Article