அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி..!! தனியார் மருத்துவமனையில் அனுமதி..!! தீவிர சிகிச்சை..?
Minister Raghupathi has been admitted to a private hospital after suffering sudden chest pain.
02:51 PM Jan 25, 2025 IST | Chella
Advertisement
அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ரகுபதி. இவர், சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையம் உள்ளே சென்று விமானத்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக அவரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு அவருக்கு தலைசுற்றலும், நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.