For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமலாக்கத்துறை வலையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி..!! கிடுக்குப்பிடி விசாரணை..!!

01:19 PM Nov 30, 2023 IST | 1newsnationuser6
அமலாக்கத்துறை வலையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி     கிடுக்குப்பிடி விசாரணை
Advertisement

அமைச்சர் பொன்முடி, அவரது மூத்த மகன் கவுதம சிகாமணி மற்றும் இளைய மகன் அசோக் சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக, திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த காலக்கட்டத்தில் அவரது மகன் கவுதம சிகாமணியுடன் இணைந்து குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு ரூ.28 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாகவும், அதன் மூலமாக வெளிநாட்டில் பங்குகளை வாங்கி பினாமி பெயரில் சொத்துக்களை குவித்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பொன்முடியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பாக 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பி-யுமான கவுதம சிகாமணி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி 6 மணி நேரம் விளக்கம் அளித்தனர்.

குறிப்பாக, சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் 41 கோடி ரூபாய் வைப்பு தொகை மற்றும் முக்கிய ஆவணங்களை வைத்தும் விழுப்புரம் மாவட்ட போலீஸாரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு இருவரிடம் தனிதனியாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன் மேலும் சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் தொடர்பான உரிய ஆவணங்களை பொன்முடியின் ஆடிட்டரிடம் அமலாக்கத்துறையினர் கேட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் பொன்முடியின் ஆடிட்டர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி ஆவணங்களை சமர்பித்து விளக்கமளித்தார். மேலும், அந்த காலக்கட்டத்திலிருந்து நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து இன்று (நவ.30) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பினர். அதன் பேரில் அமைச்சர் பொன்முடி இன்று காலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement