For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆகஸ்ட் 21 முதல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவக்கம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister of People's Welfare M. Subramanian has said that the consultation for junior medical course in Tamil Nadu will be started on August 21.
06:09 PM Jul 31, 2024 IST | Mari Thangam
ஆகஸ்ட் 21 முதல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவக்கம்     அமைச்சர் மா சுப்பிரமணியன்
Advertisement

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து, அமைச்சர் கூறுகையில், "இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி துவங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் 19 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கிய பின்னர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு போன்றவற்றுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22, 23 ஆம் தேதி நடைபெறும்.

மேலும், இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதல் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்க தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், மத்திய அரசின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் சென்னை கே.கே.நகர் ஐஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவை தவிர, 21 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 11,500 மருத்துவ இடங்கள் உள்ளன. நடப்பு ஆண்டு நீட் தோ்வில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போனது. உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின் ஆகஸ்ட் 14 முதல் கலந்தாய்வு நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்தது.

மாநிலத்தில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது. அந்த வகையில், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சோக்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்திருந்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சோக்கை கலந்தாய்வுக்கு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 8 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; பெட்ரோல் ஏற்றுமதி மீதான தடையை நீட்டிக்க ரஷ்யா முடிவு..!!

Tags :
Advertisement