For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tn Govt: பதிவுத்துறை மீதான மானிய கோரிக்கை...! அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்...!

Minister Murthy made fresh announcements in the discussion on the business tax and registration subsidy request.
05:55 AM Jun 27, 2024 IST | Vignesh
tn govt  பதிவுத்துறை மீதான மானிய கோரிக்கை     அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மூர்த்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, வணிகவரித்துறை அலுவலகங்களின் பணி செயல்பாடுகள் ரூ.5.48 கோடி செலவில் மேம்படுத்தப்படும். வணிகவரி துறையிலுள்ள ஏழு மண்டல பயிற்சி மையங்களில் கணினி வழி பயிற்சி வழங்குவதற்கு தேவையான கணினி உபகரணங்கள் ரூ.4.93 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.

Advertisement

கடலூர் கோட்டத்திற்குட்பட்ட பழமையான நிலையில் உள்ள கடலூர் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டடத்தினை இடித்து புதிய வணிகவரி கட்டடம் ரூ.23 கோடி செலவில் கட்டப்படும். திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களுக்கு புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.22 கோடி செலவில் கட்டப்படும். சேலத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டட வளாகத்தில் சேலம் நுண்ணறிவு கோட்டத்திற்கு புதிய கட்டடம் ரூ.9.84 கோடி செலவில் கட்டப்படும்.

சேலம் கோட்டத்திற்குட்பட்ட மூன்று வரிவிதிப்பு வட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6 கோடி செலவில் கட்டப்படும். மதுரை கோட்டத்திற்குட்பட்ட பழமையான நிலையில் உள்ள வணிகவரி வளாக இணைப்பு கட்டடத்தினை இடித்து புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6.30 கோடி செலவில் கட்டப்படும். மதுரை கோட்டத்திற்குட்பட்ட தேனியில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6.30 கோடி செலவில் கட்டப்படும். விருதுநகர் கோட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களுக்கு விருதுநகர் (நுண்ணறிவு) கோட்ட ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தில் கூடுதல் தளங்கள் ரூ.4.60 கோடி செலவில் கட்டப்படும்.

காஞ்சிபுரம் கோட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களுக்கு காஞ்சிபுரத்தில் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.4.20 கோடி செலவில் கட்டப்படும். மதுரையில் உள்ள பிராந்திய கோட்ட வணிகவரி பணியாளர் பயிற்சி நிலைய கட்டடம் ரூ.3.29 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, அக்கட்டடத்திற்கு கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படும். வேலூர் கோட்டத்திற்குட்பட்ட ஆம்பூர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.70 கோடி செலவில் கட்டப்படும்.

திருச்சி கோட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி மாநில வரி அலுவலர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.52 கோடி செலவில் கட்டப்படும். விருதுநகர் கோட்டத்திற்குட்பட்ட பரமக்குடி மாநில வரி அலுவலர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.38 கோடி செலவில் கட்டப்படும். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு இணைப்பு கட்டடத்தில் இயங்கி வரும் இரண்டு மின் தூக்கிகள் ரூ.59 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்படும். ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட கரூர் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் ரூ.26 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

பதிவுத்துறைக்கு ரூபாய் 100 கோடி செலவில் 36 புதிய பதிவுத்துறை அலுவலக கட்டடங்கள் கட்டப்படும். 2024-25 ஆம் நிதியாண்டில் 36 புதிய அலுவலக கட்டடங்கள் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ரூபாய் 100 கோடி செலவில் கட்டப்படும். கும்பகோணம் மற்றும் விருத்தாச்சலம் பதிவு மாவட்டங்களில் மாவட்டப்பதிவாளர் (தணிக்கை) பணி அமைப்புகள் உருவாக்கப்படும். பணிப்பளு மிகுந்த சார்பதிவாளர் அலுவலகங்களை பிரித்து புதியதாக 7 சார்பதிவாளர் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படும். பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திற்கு LAN இணைப்பு ஏற்படுத்தப்படும். அரசு கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களின் கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்படும்.

Tags :
Advertisement