முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமைச்சரே நீங்கள் சொல்வது உண்மையா..? எதுக்கு பொய் பேசுறீங்க..!! நிரூபிக்க தயாரா..? அன்புமணி சவால்..!!

07:29 AM May 08, 2024 IST | Chella
Advertisement

வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை மின்துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கிராமப்புறங்களில் உள்ள கடைமுனை நுகர்வோருக்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், மின்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். மின்துறை அமைச்சரின் அறிக்கை வெளியான பிறகு காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் பலரை தொடர்பு கொண்டு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தேன்.

கடந்த காலங்களில் இருந்த அதே நிலைமை தான் இப்போதும் நீடிப்பதாகவும், தொடர்ச்சியாக 3 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கிராமப்பகுதிகளில் மின்னழுத்தக் குறைபாடு தொடர்கிறது. பல இடங்களில் 150 முதல் 160 வோல்ட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதனால் பல மின்சாதனங்களை இயக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மின்துறை அமைச்சரின் அறிக்கையில், கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை என்றால், தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, அந்தந்த பகுதிகளில் உள்ள உழவர்களிடம் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மை தானா? என்பதை கேட்டறியும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

சென்னையின் அதிகபட்ச மின் தேவை 4590 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. சென்னையின் மின் தேவையை நிறைவேற்றும் அளவுக்குக்கூட மின்னுற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையவில்லை என்பது தான் உண்மை. எனவே, தமிழ்நாடு சிறப்பாக உள்ளது, செழிப்பாக உள்ளது என்பன போன்ற பொய் பிம்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதை விடுத்து தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்களை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Read More : செல்வ செழிப்புடன் வாழ இந்த மரத்தை வழிபட்டாலே போதும்..!! அனைத்தும் உங்களை தேடி வரும்..!!

Advertisement
Next Article