தப்பித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!! அப்செட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்..!!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
2006-2011ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தும் வருகிறார். அமைச்சர் ஐ.பெரியசாமி, 2006-2011இல் தமது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கீடு செய்தார் என்பது வழக்கு.
2012-இல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2021இல் தன்னை விடுவிக்க கோரி எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மனுத் தாக்கல் செய்தார். இதனையேற்று அமைச்சர் ஐ.பெரியசாமியை கடந்த ஆண்டு எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு எதுவும் செய்யவும் இல்லை. இந்த பின்னணியில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பலர் வழக்குகளில் விடுவிக்கப்பட்ட தீர்ப்புகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.
இதில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு விடுவிக்கப்பட்ட தீர்ப்பும் ஒன்று. இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிவுக்கவும் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்திருந்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதனை ஏற்று உச்சநீதிமன்றம் இன்று அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. இன்றைய விசாரணையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கீழ் நீதிமன்றத்தின் விசாரணையை ஒத்திவைக்கவும் உத்தரவிட்டது.
Read More : மக்களவை தேர்தலோடு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல்..? சத்யபிரதா சாஹூ சொன்ன முக்கிய தகவல்..!!