For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோர விபத்து.. அடுத்தடுத்து மோதிய வாகனங்களால் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

Mini van hits parked bus - 9 people dead on the spot
12:54 PM Jan 17, 2025 IST | Mari Thangam
கோர விபத்து   அடுத்தடுத்து மோதிய வாகனங்களால் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Advertisement

மகாராஷ்டிராவில் நாசிக்-புனே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை காலை நாராயணகோவில் நோக்கிச் சென்ற மினிவேன் மீது பின்னால் வந்த டெம்போ முதலில் மோதியது. இதனால் சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியது. இதனால் ஏற்பட்ட பயங்கர விபத்தி மினி வேனில் இருந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

உடனடியாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்தவர்களின் உடல்கள் உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புனே கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் தேஷ்முக் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; ”உங்கள் கருத்தை ஏற்க முடியாது”..!! பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!! எந்த வழக்கில் தெரியுமா..?

Tags :
Advertisement