50 அடி பள்ளத்தில் மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து!. 14 பேர் பலியான சோகம்!. கர்நாடகாவில் பயங்கரம்!
Accident: கர்நாடகாவில் காய்கறி, பழங்களை ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், சாவனுாரை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் 25 பேர், நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய, உத்தர கன்னடா மாவட்டம், கும்டாவுக்கு, மினி லாரியில் சென்றனர். நேற்று அதிகாலை 5:00 மணியளவில், உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடர்ந்த பனி மூட்டம் காரணாக, அவ்வழியாக சென்றவர்களுக்கு தெரியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பின், லாரி கவிழ்ந்திருப்பதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், கிரேன் வாயிலாக லாரியை அப்புறப்படுத்திய போது, காய்கறிகள் மூட்டைகளின் அடியில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது தெரிந்தது. இந்த விபத்தில், தொழிலாளர்கள், வியாபாரிகள் என 14 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், லாரியில் சிக்கி உயிருக்கு போராடிய 15க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Readmore: கவனம்…! e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும்…! இல்லை என்றால் பணம் வராது..!