For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புரட்டிப்போட்ட மில்டன் புயல்!. மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று!. பலத்த சேதத்துடன் வெள்ளக்காடான ஃபுளோரிடா!.

Milton storm flipped!. Wind speed of 100 km per hour!. Flooded Florida with heavy damage!
08:47 AM Oct 10, 2024 IST | Kokila
புரட்டிப்போட்ட மில்டன் புயல்   மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று   பலத்த சேதத்துடன் வெள்ளக்காடான ஃபுளோரிடா
Advertisement

Milton storm: புளோரிடாவின் டாம்பாவிலிருந்து தென் மேற்கே 300 மைல் தூரத்தில் நிலை கொண்ட மில்டன் புயல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்து வருகிறது.

Advertisement

அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உண்டான ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்து, கடந்த செப்.26ம் தேதி புளோரிடா பகுதியில் கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயல் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பல வீடுகள், கட்டிடங்கள் சூறாவளியால் சேதமடைந்தன.

மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த புயல் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் மக்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். ஹெலன் புயல் பாதிப்பை ஏற்படுத்திச் சென்ற சில நாட்களிலேயே மற்றொரு புயல் புளோரிடா பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதாவது, மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சக்தி வாய்ந்த புயலாக உருவாகி புளோரிடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு மில்டன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் ஆபத்து பிரிவில் 5-ஆம் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்தநிலையில், மில்டன் புயல் ஃபுளோரிடா மாகாணத்தில் கரையை கடந்து வருகிறது. மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் ஃபுளோரிடா மாகாணத்தில் வீடுகள் சேதமாகியுள்ளது. மில்டன் புயலால் ஃபுளோரிடாவில் கனமழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. புளோரிடாவில் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Readmore: உஷார்!. டூத் பிரஷ்களில் 600க்கும் மேற்பட்ட வைரஸ்கள்!. ஆய்வில் அதிர்ச்சி!

Tags :
Advertisement