முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஏப்.8ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மில்லியன் கணக்கான மக்கள்..!! பள்ளிகளுக்கும் விடுமுறை..!! என்ன நடக்கிறது..?

07:14 AM Apr 03, 2024 IST | Chella
Advertisement

ஏப்ரல் 8ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த வானியல் அதிசயம் வட அமெரிக்கா முழுவதும் தெரியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். இந்த நிகழ்வு சுமார் 1,000 கிலோ மீட்டர் வரை தெரியும்.

Advertisement

இந்நிலையில், வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டுக்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளதால், லட்சக்கணக்காக மக்கள் அங்கு குவிய வாப்புள்ளது. இதன் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா, கனடாவில் தெற்கு ஒன்டாரியோவில் அமைந்துள்ளது.

இங்குள்ள நீர்வீழ்ச்சி உலக புகழ்பெற்றது. வரும் 8ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், அது நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபளிக்கும். இந்த நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடுவார்கள். இதனால், அங்கு அவசர நிலை அறிவித்துள்ளதாக நயாகரா பிராந்தியத் தலைவர் ஜிம் பிராட்லி தெரிவித்துள்ளார்.
சூரிய கிரகணத்தன்று மில்லியன் கணக்கான மக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியில் கூடுவார்கள் என போலீசார் கணக்கிட்டுள்ளனர். அவசரகால தேவைகலான மொபைல் போன், நெட்வொர்க், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரிய கிரகணம் நிகழும் முன் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை இருப்பு வைத்துக்கொள்ளுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விதிகளை பின்பற்றவும், சூரிய கிரணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சூரிய கிரகணத்தை முன்னிட்டு நயாகராவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து ISO 12312-2 சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை..!!

Advertisement
Next Article