For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மிக்ஜாம் புயல்: நாளை நடக்கவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!

10:12 PM Dec 03, 2023 IST | 1Newsnation_Admin
மிக்ஜாம் புயல்  நாளை நடக்கவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…
Advertisement

வங்கக்கடலில் நிலவி வரும் மிக்ஜாம் புயல் 210கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டு இருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாளை முற்பகல் வடதமிழகம் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலைகொண்டு பிறகு கரைக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடக்கும் எனவும் இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விளிப்புறம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் காரணமாக நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகளும் தள்ளிக் வைக்கப்பட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுகள் நடைபெறும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement