மிட் நைட்டில் பசியா.? இந்த கொரியன் ஸ்டைல் நூடுல்ஸ் ரெஸிபி ட்ரை பண்ணி சாப்பிடுங்க.!
என்னதான் டின்னர் சாப்பிட்டாலும் சிலருக்கு நடுராத்திரியில் பசி எடுக்கும். அப்போது சாப்பிடுவதற்கு எளிமையான மற்றும் சுவையான கொரியன் ஸ்டைல் நூடுல்ஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இது செய்வதற்கு நூடுல்ஸ் நல்லெண்ணெய், ஸ்ப்ரிங் ஆனியன், பூண்டு, மிளகாய் தூள், காய்ந்த மிளகாய், வினிகர், சோயா சாஸ் சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு சீனி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நூடுல்ஸை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
நூடுல்ஸ் நன்றாக வெந்ததும் நல்லெண்ணையை நன்றாக சூடாக்கவும். நல்லெண்ணெய் சூடானதும் அதில் பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன், எள்ளு, மிளகாய் தூள் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் போட வேண்டும். இவற்றை நன்றாக மிக்ஸ் செய்த பின் இவற்றுடன் உப்பு, சீனி, வினிகர் மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த பின் வேக வைத்த நூடுல்ஸை இவற்றுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் சமைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்தால் சுவையான கொரியன் ஸ்டைல் நூடுல்ஸ் ரெடி.