முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"ஊழியர்களை சீனாவில் இருந்து வெளியேற சொல்லும் மைக்ரோசாப்ட்..!" என்ன காரணம் தெரியுமா?

07:35 PM May 16, 2024 IST | Mari Thangam
Advertisement

இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் சீன ஊழியர்கள் அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடமாற்றம் செல்லும் வாய்ப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே உள்ள வர்த்தக தடை மற்றும் கொள்கை பதற்றங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள், கம்ப்யூட்டர் சிப்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து சீன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், சீனாவில் உள்ள தனது முக்கிய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு இடம்பெயர வாய்ப்பு அளித்துள்ளது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் வர்த்தகம் பாதிக்காமல் இயங்கும், சீனா - அமெரிக்கா மத்தியில் பிரச்சனை தீவிரம் அடைந்தால் சீன அலுவலகத்தை மூட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் தப்பித்துக்கொள்ள இந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் என யூகிக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், அமெரிக்க வர்த்தகத் துறை, செயற்கை நுண்ணறிவு மாடல்களை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளைப் பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தச் AI மாடல்கள் மென்பொருள் மற்றும் பயிற்சி தரவுகள் ரகசியமாக வைக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக, சீனாவில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற அச்சமும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இருக்கலாம்.

இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த இடமாற்றம் குறித்து விளக்கம் அளிக்கும்போது, மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு நிறுவனத்திற்குள்ளேயே வாய்ப்புகளை வழங்குவது தங்களின் உலகளாவிய வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் சீனாவில் அதிகப்படியான கவனம் செலுத்தும், தொடர்ந்து சீனாவில் இயங்குவதற்கான பணிகளைச் செய்யும் எனவும் மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது…!

Advertisement
Next Article