'48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்' என்ன காரணம் தெரியுமா?
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ .267 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் என்பது வாஷிங்டனின் ரெட்மாண்டில் தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும். பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் ஏப்ரல் 4, 1975 இல் மைக்ரோசாப்ட் நிறுவப்பட்டது, ஆல்டேர் 8800க்கான அடிப்படை மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கி விற்பனை செய்தார். இது 1980களின் மத்தியில் MS-DOS உடன் தனிநபர் கணினி இயக்க முறைமை சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது, அதைத் தொடர்ந்து விண்டோஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
நிறுவனத்தின் 1986 இன் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) மற்றும் அதன் பங்கு விலையின் அடுத்தடுத்த உயர்வு மூன்று பில்லியனர்களை உருவாக்கியது மற்றும் மைக்ரோசாப்ட் ஊழியர்களிடையே 12,000 மில்லியனர்களை உருவாக்கியது. 1990 களில் இருந்து, இது இயக்க முறைமை சந்தையில் இருந்து பெருகிய முறையில் பன்முகப்படுத்தப்பட்டு பல நிறுவன கையகப்படுத்துதல்களைச் செய்துள்ளது.
இந்த நிலையில் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், ஹைதராபாத்தில் சுமார் ரூ.267 கோடி மதிப்பிலான 48 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. சத்ய நாடெல்லா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத் என்பதால் மைக்ரோசாப்ட்-ன் பெரும்பாலான செயல்பாடுகள் இந்த நகரத்திலேயே அமைகிறது.
இந்த நிலையில் டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான ப்ராப்ஸ்டாக் வெளியிட்டுள்ள தகவல் படி, ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நில மொத்த விற்பனையாளரான சாய் பாலாஜி டெவலப்பர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மைக்ரோசாப்ட் சுமார் 267 கோடி ரூபாய்க்கு 48 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் தனது டேட்டா சென்டர் வணிகத்தை விரிவுபடுத்தப் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த பகுதியில் மிகப்பெரிய டேட்டா சென்டர்களில் ஒன்றை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலம் ஹைதராபாத் நகர மையத்திலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் நிறுவனம் இந்த நிலத்திற்காக அதிக விலையைக் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
பெங்களூரு மற்றும் நொய்டா தவிர, மைக்ரோசாஃப்ட் தற்போது ஹைதராபாத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டரை இயக்கி வருகிறது. இந்த கேம்பஸ்-ல் தான் அசூர், விண்டோஸ், ஆபீஸ் மற்றும் பிங் போன்ற மைக்ரோசாப்ட்டின் சேவைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.