For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எம்ஜிஆர் + ஜெயலலிதா..!! விஜய் + த்ரிஷா..!! பாடகி சுசித்ரா போட்ட புது குண்டு..!! தமிழ் சினிமாவில் பரபரப்பு..!!

In a video released by famous singer Suchitra, Vijay openly spoke some things about Trisha, which has sparked controversy.
09:35 AM Jul 03, 2024 IST | Chella
எம்ஜிஆர்   ஜெயலலிதா     விஜய்   த்ரிஷா     பாடகி சுசித்ரா போட்ட புது குண்டு     தமிழ் சினிமாவில் பரபரப்பு
Advertisement

பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஒன்றில் விஜய், திரிஷா குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய், திரிஷா குறித்த கிசுகிசு பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. கில்லி படத்தில் இருவரும் இணைந்து நடித்தது முதலே அவர்களுக்குள் நட்பு இருப்பதாகவும் அடுத்தடுத்த படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்த நிலையில், அவர்களது நட்பு மிகவும் இறுக்கமாகி, இதனால் விஜய் மனைவி சங்கீதா, விஜயை பிரிந்து சென்று பல மாதங்களாக லண்டனில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, லியோ படத்தில் லிப்லாக் காட்சியில் இருவரும் நடித்திருந்தனர். மேலும், தி கோட் படத்தில் விஜயுடன் திரிஷா முதன்முறையாக அயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.

விஜய் வசிக்கும் நீலாங்கரையில் திரிஷாவுக்கும் பங்களா உள்ளது. சமீபத்தில் சென்னை ஆர்ஏ புரத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் ரூ. 25 கோடி ரூபாய் விலையில், 8500 சதுர அடியில் அலுவலகம் வாங்கியுள்ளா் விஜய். அதே அபார்ட்மென்டில், ரூ. 17 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார் திரிஷா. அங்கு லிப்ட்டில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் சமீபத்தில் வைரலானது. இந்நிலையில், பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஒன்றில் விஜய், திரிஷா குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், ”விஜய், அவரது மனைவி சங்கீதா இருவரும் மீண்டும் ஒன்றுசேர வேண்டும். ஒரு சின்ன ஈகோ சண்டையால் பிரிந்த குடும்பத்தை மீண்டும் சேர்ந்து வாழ விடாமல் தடுக்க, திரிஷா போன்ற ஒட்டுண்ணிகள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். லிப்ட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, விஜயை சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர். இதன் மூலம் விஜயுடன் இணைய திரிஷா நினைக்கிறார். விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்குள் அவர் நுழைய விரும்புகிறார்.

எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஒரு ஒட்டுண்ணிதான். அவரிடம் அரசியல் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு எம்ஜிஆரையே ஒதுக்கி விட்டார். ஜெயலலிதா போலதான் திரிஷாவும் இருக்க நினைக்கிறார். அதனால் விஜய் திரிஷாவை விட்டு விலகி, தனது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Read More : உத்தரப்பிரதேச ஆன்மிக நிகழ்வு..!! பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு..!!

Tags :
Advertisement