24 மணி நேரத்தில் 7 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்..!! மொத்த எவ்வளவு இருக்கு தெரியுமா..?
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு மேட்டூர் அணை முற்றிலுமாக வறண்டு காட்சி அளித்தது. கார்நாடகவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரும் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தான், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்த நிலையில், இயற்கையாகவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய சூழ்நிலையை கர்நாடகாவுக்கு ஏற்படுத்தியது. கர்நாடகவில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு 75,000 கனஅடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 77,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 70,000 கனஅடியாக குறைந்துள்ளது. இருந்த போதும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இன்று மாலைக்குள் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் விவசாயிகள் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 40 அடிக்கும் குறைவாக இருந்த நீர் மட்டும் இரண்டு மடங்காக அதிகரித்து தற்போது 82 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 78,238 கன அடியில் இருந்து 79,682 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 82.00 அடியாகவும், நீர் இருப்பு 43.97 டி.எம்.சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒரே நாளில் 7 அடி அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்தது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Read More : வரும் 25ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து..!! என்ன காரணம் தெரியுமா..?