For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்..!! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

A flood alert has been issued for 11 districts due to release of surplus water from Mettur Dam.
12:43 PM Jul 29, 2024 IST | Chella
முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்     11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதையொட்டி, 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கனமழை காரணமாக நிரம்பியுள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறந்து விடப்படலாம் என்பதால், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Read More : திருமண வரன் தேடும் ஆண்களே உஷார்..!! காவல்துறையை கூட விட்டு வைக்கல..!! இவர்கள் தான் குறியாம்..!!

Tags :
Advertisement