120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை..!! நீர்வரத்து 1.70 லட்சம் கன அடியாக அதிகரிப்பு..!!
மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், முழு கொள்ளளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை எட்டியது. இதன்மூலம் அணை வரலாற்றில் 43-வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் நீா் முழுமையாக 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேட்டூா் அணைக்கு இன்று காலை நீா்வரத்து வினாடிக்கு 1,70,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 16 கண் பாலம் வழியாக 1,48,500 கனஅடி நீரும், நீா் மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கும் நிலையில், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
Read More : சாப்பிடும்போது இந்த ஒரு விஷயத்தை மறக்காம பண்ணுங்க..!! என்ன தெரியுமா..?