For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆஹா.! இனி "10 மணிக்கு மேல்" இன்ஸ்டா ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை.! மெட்டா அதிரடி அறிவிப்பு.!

07:56 PM Jan 20, 2024 IST | 1newsnationuser7
ஆஹா   இனி  10 மணிக்கு மேல்  இன்ஸ்டா ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை   மெட்டா அதிரடி அறிவிப்பு
Advertisement

கோவிட்-19 காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது உலகெங்கிலும் பல கோடி கணக்கான மக்கள் சமூக வலைதளங்களை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அனேக மக்களுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் என்னும் சிறிய வீடியோக்களை பார்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. பெரும்பாலும் தூங்குவதற்கு முன்பாக இந்த ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் பலரிடமும் அதிகரித்திருக்கிறது. இதனால் அவர்களது தூக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது போன்ற பழக்கங்களில் இருந்து தங்களது பயனர்களை காப்பதற்காக மெட்டா நிறுவனம் புதிய நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் செயலியின் புதிய அப்டேட்டில் நைட் டைம் நட்ஜ் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இரவு 10 மணிக்கு மேல் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எச்சரிக்கை செய்தி வரும் வகையில் புதிய வசதியை உருவாக்கி இருக்கிறது மெட்டா. தங்களது பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய வசதியை உருவாக்கி இருப்பதாக மெட்டா தெரிவித்து இருக்கிறது.

Tags :
Advertisement