24 பேரை பணி நீக்கம் செய்த மெட்டா...! உணவு வவுச்சர்களை பயன்படுத்தி முறைகேடு..!
மெட்டா நிறுவனம் சுமார் 24 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உணவு வவுச்சர்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்காகவே ஊழியர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் இந்த பணி நீக்கம் நடந்ததாக கூறப்படுகிறது. சில ஊழியர்கள் உணவு வவுச்சர்களை வைத்து பற்பசை, சலவை சோப்பு, ஸ்காட்ச் டேப் மற்றும் ஒயின் கண்ணாடிகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து META ஆய்வு செய்தபோது, அனைத்து ஊழியர்களும் உணவு வவுச்சர்களை தவறாகப் பயன்படுத்தியது கவனிக்கப்பட்டது.
நிறுவனத்தின் விதிகளின்படி, ஊழியர்கள் உணவு வவுச்சர்களைப் பயன்படுத்தி அலுவலக நேரத்தில் மட்டுமே உணவை வாங்க முடியும். ஆனால் சில ஊழியர்கள் பற்பசை, சலவை சோப்பு, ஸ்காட்ச் டேப் மற்றும் மதுபான கண்ணாடிகள் போன்ற மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். சில ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்றாலும், அவர்கள் உணவு வவுச்சர்களைப் பயன்படுத்தினர். அத்தகைய முறைக்கேட்டில் ஈடுபட்ட 24 ஊழியர்களையும் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து META தரப்பில் இருந்து கூறுகையில், உணவு வவுச்சர்களை ஊழியர்கள் முறைகேடாக பயன்படுத்தியது தெரிய வந்தது. நிறுவனம் ஊழியர்களை எச்சரித்தது மற்றும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஏனெனில் சில ஊழியர்கள் உணவு வவுச்சர்களை அடிக்கடி தவறாக பயன்படுத்துகின்றனர். விதிகளை மீறும் நபர்களின் தவறுகளை மெட்டா நிறுவனம் அலட்சியப்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், Meta சுமார் 21,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இப்போது நிறுவனத்தில் சுமார் 70,799 ஊழியர்கள் உள்ளனர். மெட்டா இப்போது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிரிவுகளிலும் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இது தவிர, நிறுவனங்கள் உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் அலுவலக பொருட்கள் போன்ற பல சலுகைகளையும் குறைத்துள்ளன.
Read more ; தந்தை உட்கொள்ளும் உணவு பெண் குழந்தைகளின் இதய அபாயத்துடன் தொடர்புடையது..!! – ஆய்வில் தகவல்