முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"மழைக்காலம் வந்துடுச்சு…" நோய்களிலிருந்து காத்துக் கொள்ள உதவும் 5 பழங்கள்…!

06:20 AM Nov 17, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

பருவ மழை காலம் வந்தாலே அலர்ஜி நோய்த்தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமை போன்றவை ஏற்படும். இது போன்ற உபாதைகளில் இருந்து நம் உடலை காத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இந்தப் பருவமழை காலம் மற்றும் குளிர் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கவும் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளவும் உதவுகிறது. இவ்வாறு நம் உடலுக்கு நன்மை பயக்கும் ஐந்து பருவ கால பழங்கள் பற்றி பார்ப்போம்.

Advertisement

லிச்சி: பருவமழை காலங்களில் நாம் உண்பதற்கு சிறந்த பழங்களில் ஒன்று லிச்சி. குளிர் காலம் மற்றும் பருவ மழை காலங்களில் காற்றில் ஈரப்பதம் காரணமாக ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் மூச்சு விட அதிகம் சிரமப்படுவார்கள். இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் லிச்சி பழத்தை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு மூச்சுப் பிரச்சனையை சரி செய்ய உதவும். இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மூச்சு பிரச்சனையை சரி செய்ய உதவுகின்றன. மேலும் இவற்றில் இருக்கும் அதிக அளவிலான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.

நாவல் பழம்: நாம் அனைவருமே குழந்தை பருவத்தில் இந்த பழத்தை சாப்பிட்டு இருப்போம். நாவல் பழம் அதிகளவு ஊட்டச்சத்துக்களையும் குறைந்த கலோரிகளையும் கொண்டது. இதில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய அதிக அளவிலான நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. பருவமழை காலங்களில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளிலிருந்து காத்துக் கொள்ள இந்த பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

கொய்யாப்பழம்: கொய்யாப்பழம் அனைத்து பருவங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழ வகையாகும். இதில் ஏராளமான வைட்டமின்களும் இரும்புச்சத்து, பொட்டாசியம், போலேட் போன்ற கனிமச் சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இவை இரைப்பை பிரச்சினைகள் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் உடல் உபாதைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

மாதுளை: மாதுளை பழம் பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான பழமாகும். இந்தப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. இது நம் உடலை நோய் தொற்றுக்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் மாதுளை பழத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கக் கூடிய சத்துக்களும் இருக்கின்றன. இந்த பணத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். மாதுளை பழத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள் ரத்த விருத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பப்பாளி: பப்பாளி நமது ஊர் பகுதிகளில் எளிமையாக கிடைக்கக்கூடிய சத்து நிறைந்த ஒரு கனி வகை. இதில் வைட்டமின்களும் நார்ச்சத்துக்களும் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரும் பங்கு ஆற்றுவதோடு இவற்றில் இருக்கக்கூடிய அதிக அளவிலான நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுப்படுத்துவதிலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதிலும் பப்பாளி முக்கிய பங்கு வைக்கிறது.

Tags :
5 பழங்கள்health tipsPapayaRainy seasonகொய்யாப்பழம்நாவல் பழம்பப்பாளிமழைக்காலம்மாதுளைலிச்சி
Advertisement
Next Article