For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, சாலையோரம் அழைத்து சென்று..." சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த போலீசார்..

mentally disturbed woman was sexually abused by 3 men
06:56 PM Jan 13, 2025 IST | Saranya
 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை  சாலையோரம் அழைத்து சென்று     சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த போலீசார்
Advertisement

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில், திருட்டு வழக்கு ஒன்றை போலீசார் விசாரித்து வந்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த சிசிடிவி காட்சியில், பெண் ஒருவரை, மூன்று பேர் சேர்ந்து சாலையோரம் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர், மூன்று பேரும் சேர்ந்து, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சியில் இருந்த பெண் யார், அவரை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

இதையடுத்து, சிசிடிவி காட்சியில் பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேரையும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் செய்த குற்றத்தை மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த அந்தப் பெண், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் குன்றிய பெண்ணை மூன்று ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: கள்ளக்காதலியின் 15 வயது மகளுடன், பலமுறை உல்லாசமாக இருந்த பாஜக நிர்வாகி!!! பணத்திற்காக தாய் செய்த அசிங்கம்..

Tags :
Advertisement