For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆண்களே.! சாணக்கிய நீதிபடி மனைவியை மகிழ்ச்சிபடுத்த இதை பண்ணுங்க போதும்.!?

08:54 PM Jan 24, 2024 IST | 1newsnationuser5
ஆண்களே   சாணக்கிய நீதிபடி மனைவியை மகிழ்ச்சிபடுத்த இதை பண்ணுங்க போதும்
Advertisement

சாணக்கியர் என்பவர் ஒரு அறிவான சிறந்த அறிஞர் மற்றும் திறமையான ஆசிரியர் ஆவார். பல்வேறு விஷயங்களில் ஆழமான அறிவையும், பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்படும் அனுபவத்திலும் சிறந்தவர் ஆவார். இவரின் அறிவையும், அனுபவத்தையும் மக்களுக்காக மட்டுமே முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார். சாணக்கியரின் கொள்கைகள் பல சாமானியரின் வாழ்க்கையில் வெற்றி பெற உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இவ்வாறு கணவன், மனைவி உறவு பற்றியும் சாணக்கிய நீதியில் பல விஷயங்களை கூறியிருக்கிறார். என்னதான் வாழ்வில் பல விஷயங்கள் கிடைத்தாலும் கணவன், மனைவி இடையில் காரணமே இல்லாமல் சண்டை வந்து கொண்டு தான் இருக்கும். மனைவியை எப்படி மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளலாம் என்பதை குறித்தும் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட விஷயங்களை செய்வதன் மூலம் மனைவியை கணவன்மார்கள் திருப்திப்படுத்தலாம்.

1. உங்கள் விருப்பங்களை துணையின் மீது திணிக்க கூடாது -  கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் அவரவர் விருப்பங்களை துணையின் மீது திணிக்க கூடாது. ஆனால் இதில் பெரும்பாலும் கணவனே மனைவியை கட்டாயப்படுத்தி அவர் விரும்புவதை செய்ய வைக்கிறார் இது மிகவும் தவறான செயலாகும்.
2. மரியாதை - என்னதான் நெருக்கமான கணவன், மனைவியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது என்பது மிகவும் சிறந்த செயலாக கருதப்பட்டு வருகிறது. அப்படியிருக்க கணவன் மனைவி தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவருக்கும் பொது இடங்களிலும், வீட்டிற்குள்ளும் மரியாதைையுடன் நடத்துவது கணவன், மனைவி உறவை மேம்படுத்தும்.
3. நம்பிக்கை- கணவன், மனைவி உறவிற்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நம்பிக்கை இல்லாமல் திருமண வாழ்வு என்பது கடினமான ஒன்றாக மாறிவிடும்.
4. பாதுகாப்பு - ஆதி காலத்தில் இருந்தே ஆண்கள் பெண்களை பாதுகாப்பதற்காகவே படைக்கப்பட்டனர் என்று முன்னோர்கள் கூறுவதை கேள்விப்பட்டதுண்டு. அப்படியிருக்க தற்போதும் தங்களை பாதுகாக்கும் ஆண்களுடன் இருக்கவே பெண்கள் அதிகம் விரும்புவார்கள். எனவே தன் மனைவியை பாதுகாக்க முடியாத கணவனுடன் எந்த பெண்ணும் இருக்க விரும்ப மாட்டார்.
5. தற்பெருமை -  சாணக்கிய நீதியின் கூற்றுப்படி அதிக தற்பெருமை உடைய கணவன்மார்களின் திருமண வாழ்வு நிலைக்கு நிற்காது என்று கூறியுள்ளனர். திருமண உறவில் ஈகோ அதிகமாக இருந்தால் அது உறவை பாதிக்கும். தற்பெருமை இல்லாமல் இருப்பதும் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும். இவ்வாறு ஒரு சில குணங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நம் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதுடன் மனைவியையும் மகிழ்ச்சி படுத்தலாம் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

Tags :
Advertisement