அச்சுறுத்தும் குரங்கு அம்மை!. வைரஸை கண்டறியும் ஆர்.டி.- பி.சி.ஆர். கிட் அறிமுகம்!.
Mpox: குரங்கு அம்மை தொற்றுநோய் கண்டறியும் ஆர்.டி.- பி.சி.ஆர். பரிசோதனை தொகுப்பை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்தியுள்ளார்.
காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கு அம்மை அதிகரித்ததை தொடர்ந்து பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வரையில் குரங்கம்மையால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இறப்பு விகிதம் அதிகம் இல்லை என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள், வயதானோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் என சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் குரங்கம்மை தொற்று என்பது பெரிய அளவில் கண்டறியப்படவில்லை என்றாலும், ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் குரங்கம்மை பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால், மற்ற நாடுகள் தங்கள் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரபிரதேஷ் மேட்டெக் பொருளாதார மண்டலத்தில் ஏ.எம்.டி.இசட் மற்றும் டிரான்சிஸியா டியோஜினிஸ்டிக் இணைந்து குரங்கு அம்மை தொற்றுநோய் கண்டறியும் ஆர்.டி.- பி.சி.ஆர். பரிசோதனை தொகுப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆர்.டி.- பி.சி.ஆர். கிட் ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஎஸ்சிஓ ஆல் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குரங்கு அம்மை பரிசோதனை கிட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று அறிமுகப்படுத்தினார்.
Readmore: பெரிய ஆபத்து? மணிக்கு 38,453 கிமீ வேகம்.. பூமியை நெருங்கும் விண்கல்..!! நாசா எச்சரிக்கை