அச்சுறுத்தும் டெங்கு..!! அச்சத்தில் மக்கள்..!! கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! பாதுகாப்பா இருங்க..!!
பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 60% பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 2023ஆம் ஆண்டை விட இந்தாண்டின் முதல் பாதியில் டெங்கு பாதிப்பு 60% அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 2023இல் டெங்குவால் மொத்தம் 2,003 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வருடம் ஜூன் மாதத்தில் 4,886 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிபிஎம்பியின் கீழ் 1,230 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறி வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது மாநிலத்தில் 60 சதவீதம் பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. இது தவிர, மற்ற காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெங்களூருவில் கடந்த மாதம் மே மாதத்தில் 727 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. இந்நிலையில், கடந்த 20 நாட்களில் 1,230 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் ஜனவரி முதல் திங்கள் (ஜூன் 24) வரை 2,457 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஜனவரி முதல் ஜூன் 20 வரை மாநிலத்தில் மொத்தம் 7,343 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஏடிஸ் கொசு உற்பத்தியை அழிக்க வேண்டும் என்றும் ஆஷா பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று தூய்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலைக் கண்காணிக்க வார்டுகள் அல்லது கிராமங்களுக்குச் சென்று சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.