அச்சுறுத்தும் டெங்கு!. விரைவில் குணமாக இந்த மாதிரியான உணவை சாப்பிடுங்கள்!
Dengue: கொடிய டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் கொசுக்கள் மூலமாக பரவக்கூடியது. இந்த வகை கொசுக்கள் பகலில் தான் கடிக்கும். அதுவும் சூரிய உதயமாகி 2 மணிநேரம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு சில மணிநேரம் இந்த வகை கொசுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த கொசுக்கள் கணுக்கால் மற்றும் முழங்கைகளில் தான் அதிகம் கடிக்கும்.
ஒருவருக்கு டெங்கு என்றால், அந்நபர் அதிக காய்ச்சலை சந்திப்பார். அதோடு தலைவலி, தசை வலி, மூட்டு வலி போன்றவற்றையும் அனுபவிப்பார். இந்த டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு தீவிரமான நிலையில் இருந்தால், அதை டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் என்று அழைப்பர். இந்த நிலையில் கடுமையான இரத்தப்போக்கு , உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில சமயங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
டெங்கு காய்ச்சலுக்கு என்று எந்த பிரத்யேக சிகிச்சையும் இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து, அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை வழங்கப்படும். எனவே மழைக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விரைவில் குணமாக எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
பப்பாளி பழத்தின் இலைச் சாறு டெங்கு காய்ச்சலுக்கு மிகவும் பிரபலமான ஒரு பானம். பப்பாளி இலையில் டெங்கு காய்ச்சலை சரிசெய்யும் பண்புகள் உள்ளன. அதாவது இந்த இலையானது இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவுகிறது. அதற்கு பப்பாளி இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதை ஒரு நாளைக்கு 2 முறை சிறிது குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்களை முழுமையாக பெற வேண்டுமானால், பல்வேறு காய்கறிகளை ஒன்றாக அரைத்து சாறு எடுத்து, அவற்றைக் குடிப்பது தான். இப்படி காய்கறி ஜூஸை தயாரித்து, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, விரைவில் டெங்குவில் இருந்து விடுபடலாம்.
டெங்கு நோயாளிகள் இளநீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கலாம். மேலும் இது உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கி, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு டெங்கு நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 டம்ளர் இளநீரைக் குடிப்பது நல்லது. டெங்கு நோயாளிகள் மூலிகை டீக்களை குடித்து வருவது, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் இஞ்சி டீ, ஏலக்காய் டீ, பட்டை டீ போன்ற டீக்களை தயாரித்து குடித்து வந்தால், விரைவில் டெங்குவில் இருந்து குணமாகலாம். இந்த புத்துணர்ச்சியான மணத்தைக் கொண்ட மூலிகை டீக்களை குடிப்பதன் மூலம், மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
டெங்கு இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் சிகிச்சை பெற்று வரும் போது அந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது சிகிச்சையில் இடையூறை ஏற்படுத்தும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள், காப்ஃபைன் நிறைந்த பானங்கள், காரமான உணவுகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
Readmore: 6 பேருக்கு கொரோனா எதிரொலி!. தமிழக அரசின் தினசரி நிலவர தகவல் இதோ!